மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவருக்கு 8 ஆண்டுகள் சிறை


மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவருக்கு 8 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 25 April 2018 3:45 AM IST (Updated: 25 April 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஆட்டோ டிரைவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தேனி,

தேனி அல்லிநகரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கணவாய் பீர்ஒலி (வயது 28). ஆட்டோ டிரைவர். கடந்த 2014-ம் ஆண்டு இவர், 10-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவரை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவாய் பீர்ஒலியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

நீதிபதி சுமதி அளித்த தீர்ப்பில், ‘மாணவியை கடத்தி சென்ற குற்றத்துக்காக கணவாய் பீர்ஒலிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் கணவாய் பீர்ஒலிக்கு மொத்தம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கணவாய் பீர்ஒலியை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story