விருத்தாசலம் அருகே, குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
விருத்தாசலம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் செய்தனர். மேலும் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்மாபுரம்,
விருத்தாசலம் தாலுகா கம்மாபுரம் அருகே உள்ள சு.கீணனூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின் மோட்டார் மூலம் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு, அதில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி அப்பகுதி மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் மற்ற கிராம பகுதிகளுக்கும், விவசாய விளை நிலங்களுக்கும் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். விவசாய விளைநிலங்களில் சென்று குடிநீர் எடுக்கும் போது விஷ பூச்சிகள் தாக்கும் அபாயமும் ஏற்பட்டது.
நேற்றும் அதேபோல் குடிநீர் வராததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி காலிகுடங்களுடன் விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சு.கீணனூர் பஸ் நிறுத்தம் அருகில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கம்மா புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து நடந்தே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு காலிகுடங்களுடன் சென்று முற்றுகையிட்டனர்.
இது பற்றி அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தியதுடன், விரைவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story