பணியாற்றும் இடத்தில் தொல்லை: புதுவை அரசு துறை இயக்குனர் மீதான பாலியல் புகார்; 27 பேர் சாட்சியம்
புதுவை அரசு துறை இயக்குனர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 27 பேரிடம் உள்ளூர் புகார்கள் குழு வாக்குமூலம் பெற்று பதிவு செய்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக கவர்னர் கிரண்பெடிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு, கிரண்பெடி உத்தரவிட்டார்.
இதுகுறித்து விசாரிக்க, புதுவை மாவட்ட கலெக்டர் சத்யேந்திர சிங் துர்சாவத் உத்தரவின் பேரில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையை தடுக்கும் சட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம் ‘உள்ளூர் புகார்கள் குழு’ என்ற தனி பிரிவு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக டாக்டர் வித்யா ராம்குமார், 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அதே துறைகளில் தங்களுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இந்த குழுவினருக்கு 5-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. முதற்கட்டமாக, எழுத்துப்பூர்வமாக வந்த புகார்கள் குறித்து விசாரிக்க இந்த குழு திட்டமிட்டது.
அதன்படி அதிக புகார்கள் வந்த ஒரு துறையின் இயக்குனருக்கு, உள்ளூர் புகார்கள் குழுவின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நேரில் ஆஜராகவில்லை. அவருக்கு கூடுதல் அவகாசம் தரலாம் என்று உள்ளூர் புகார்கள் குழு திட்டமிட்டது. இதற்கிடையே அந்த இயக்குனரின் அலுவலகத்தில் பணிபுரிந்த 27 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டு அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அந்த இயக்குனர், பாலியல் புகார் தொடர்பாக தன்னை உள்ளூர் புகார்கள் குழு விசாரிக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அரசு மூலமாக இந்த வழக்கை எதிர்கொள்ள உள்ளூர் புகார்கள் குழு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அரசு துறை இயக்குனர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட இந்த விவகாரம் புதுவை அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story