ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.86 ஆயிரம்!


ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.86 ஆயிரம்!
x
தினத்தந்தி 28 April 2018 9:20 AM GMT (Updated: 28 April 2018 9:20 AM GMT)

நம்மூரில் இன்றும் ஓரளவு விலை மலிவாக உள்ள பழம், வாழைப்பழம்.

இங்கிலாந்தில் வாழைப்பழம் ஒன்றின் விலை 930.11 பவுண்டு (ரூ. 86 ஆயிரம்) என்று வந்த ரசீதைப் பார்த்த பெண் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இங்கிலாந்தின் நாட்டிங்காமில் வசித்துவரும் பார்பி கார்டன் என்ற அந்தப் பெண்மணி, சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஆன்லைன் மூலம் சில பொருட்களுக்கு ஆர்டர் செய்திருக்கிறார்.

பின் அந்தப் பொருட்களுக்கான பணத்தை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தியிருக்கிறார். பொருட்களுடன் ரசீது வீட்டுக்கு வந்தவுடன், அதில் குறிப்பிடப்பட்டிருந்த வாழைப்பழத்தின் விலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

காரணம், பழத்தின் விலையாக 930.11 பவுண்டு போடப்பட்டிருந்தது.

தனது கிரெடிட் கார்டில் மோசடி நடந்து விட்டதோ என அச்சத்தில் சூப்பர் மார்க்கெட்டை பார்பி தொடர்பு கொண்டபோது, அதிக விலை குறிப்பிடப்பட்டதற்கு கணினியில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என்றும், வாழைப்பழத்துக்கு உரிய விலை மட்டுமே எடுத்துள்ளோம் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

எங்கள் கடையின் வாழைப்பழம் மிகவும் சுவையாக இருக்கும், அதேநேரத்தில் எங்கள் கணினியில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டோம். இந்தத் தவறை எங்களுக்குச் சுட்டிக்காட்டிய பார்பிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இனிமேல் இப்படி ஒரு தவறு நடக்காது என சூப்பர் மார்க்கெட் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பழத்தைக்கூட நிம்மதியாக சாப்பிட விடமாட்டேங்கிறாங்களே! 

Next Story