மாவட்ட செய்திகள்

ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட வேண்டும் - நடிகை பசி சத்யா பேட்டி + "||" + Rajini and Kamal should work together

ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட வேண்டும் - நடிகை பசி சத்யா பேட்டி

ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட வேண்டும் - நடிகை பசி சத்யா பேட்டி
ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஈரோட்டில் நடிகை பசி சத்யா கூறினார்.
ஈரோடு,

ஈரோடு கவிதாலயம் இசை பயிற்சிப்பள்ளி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகை பசி சத்யாவுக்கு விருது வழங்கப்பட்டது. முன்னதாக நடிகை பசி சத்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தலைக்கட்டு, டிராபிக் ராமசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். இதில் டிராபிக் ராமசாமி எனது 250-வது திரைப்படம்.

அரசியலுக்கு சினிமா நடிகர்கள் வரக்கூடாது என்று பலரும் கூறுகிறார்கள். நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது. மக்களுக்கு நன்மை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். மக்களின் இஷ்டத்திற்கு ஏற்ப சிஷ்டத்தை மாற்றுவதற்காக ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு உள்ளார்.

அதுபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி உள்ள கமல்ஹாசன் ஒரு கிராமத்தை தத்து எடுத்து பல நன்மைகளை செய்து வருகிறார். எனவே யார் வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் முடிவு எடுப்பார்கள். அதுபோல் மக்களுக்கு நன்மை செய்யும் ஒரே நோக்கத்தில் ரஜினியும், கமலும் அரசியலில் இறங்கி இருப்பதால் அவர்கள் 2 பேரும் இணைந்து செயல்பட வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப திரையரங்குகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் திரைப்படத்தின் பட்ஜெட்டை பொறுத்து திரையரங்குகளில் கட்டணம் நிர்ணயிக்கும் முறை அமல்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்து உள்ளது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்களிடம் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகைகள் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற புகார் சினிமா துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் உள்ளது. ஆனால் பாலியல் தொல்லை குறித்த புகாரை வெளிப்படையாக கூறுவது தவறு. இதனால் பெண்மைக்குதான் கேவலம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக திரையுலகினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இவ்வாறு நடிகை பசி சத்யா கூறினார்.