வாலாஜாவில் ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்


வாலாஜாவில் ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 29 April 2018 10:00 PM GMT (Updated: 2018-04-30T03:21:45+05:30)

ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வாலாஜா போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது

வாலாஜா, 

வாலாஜாவில் ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வாலாஜா போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமை தாங்கி பேசுகையில், ‘டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், சீருடை அணிந்து செல்ல வேண்டும், ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும், ஆட்டோ நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்ட உரிய இடத்தில் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்த வேண்டும், பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்த கூடாது’ என்றார்.

கூட்டத்தில் போலீசார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story