சோழவந்தான் பேரூராட்சியில் உரக்கிடங்கு, பயோகியாஸ் தொழில் நுட்பம், இணை இயக்குனர் ஆய்வு


சோழவந்தான் பேரூராட்சியில் உரக்கிடங்கு, பயோகியாஸ் தொழில் நுட்பம், இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 29 April 2018 10:51 PM GMT (Updated: 2018-04-30T04:21:56+05:30)

சோழவந்தான் பேரூராட்சியில் உரக்கிடங்கு, பயோகியாஸ் தொழில்நுட்பம் மற்றும் திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குனர்ஆய்வு மேற்கொண்டார்.

சோழவந்தான்,

சோழவந்தான் பேரூராட்சி வாடிப்பட்டி சாலையிலுள்ள வளர்மீட்பு பூங்காவில் உள்ள உரக்கிடங்கில் மக்கும்குப்பை, மக்காதகுப்பை என தரம் பிரித்து அதன் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதனை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலையமான் திருமுடைக்காரி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கலவை உரம் கிலோ ரூ.3க்கும், மண்புழுஉரம் கிலோ ரூ.5க்கும் விற்கப்படுவதையும் கேட்டறிந்தார்.

பின்னர் தோட்டத்தில் வைத்து பராமரிக்கப்படும் தென்னை, பப்பாளி, வாழையினை பார்வையிட்ட அவர், மூலிகைச்செடிகள் வளர்ப்பு குறித்தும் விளக்கம் பெற்றார். தொடர்ந்து நகர்பகுதிகளில் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் வீடுதிட்டம், தனிநபர் கழிப்பறை திட்டம், பசுமைவீடு திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்த அவர், திருமணமண்டபம் மற்றும் காய்கறி கழிவு முலம் நவீன தொழில் நுட்பத்தில் செயல்படுத்தப்படும் பயோகியாஸ் குறித்தும், அதை பயன்படுத்தி வருபவர்களிடம் பயன்பாடுபற்றி கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலெட்சுமி, உதவி செயற் பொறியாளர் சுரேஷ்குமார், பணிமேற்பார்வையாளர் மாணிக்கம், செயல்அலுவலர் ஜீலான்பானு, இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், சிவக்குமார், பணியாளர்கள் அசோக், சோணை,பூவலிங்கம், சதீஷ் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story