தேர்ந்தெடுக்கப்பட்ட 92 பேருக்கு பணி நியமன ஆணை


தேர்ந்தெடுக்கப்பட்ட 92 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 29 April 2018 11:27 PM GMT (Updated: 2018-04-30T04:57:41+05:30)

வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட 92 பேருக்கு பணி நியமன ஆணை 5-ந் தேதி வழங்கப்படுகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிராம சுயாட்சி இயக்க தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் துறைமங்கலம் நேஷனல் ஐ.டி.ஐ. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் 92 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். இவர்களுக்கு வருகிற 5-ந்தேதி நகராட்சி அலுவலக வளாகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.


Next Story