முத்திரையர்பாளையம் ஆயி குளத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்: நேரில் ஆய்வு செய்த கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுக்கு உத்தரவு

புதுச்சேரி முத்திரையர்பாளையம் ஆயி குளத்தில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார். குளத்தை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின் போது நீர்நிலைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது 156-வது கள ஆய்வு மேற்கொண்டார்.
இதற்காக அவர் கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு முத்திரையர்பாளையத்தில் உள்ள ஆயிகுளத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கவர்னர் மாளிகை அதிகாரிகள், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, நகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். பின்னர் அவர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவை முத்திரையர் பாளையத்தில் உள்ள ஆயி குளம் 500 ஆண்டுகள் பழமையானது. கவர்னர் மாளிகை உள்ளிட்ட புதுவை நகரின் மையப்பகுதிக்கு தேவையான குடிநீரை வழங்கி வருகிறது. இங்கு 12 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதன் மூலம் நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. கடந்த 11 வாரங்களுக்கு முன்பு இந்த குளத்தின் தூய்மைப்பணிக்கு இளம் தன்னார்வலர்கள் பலர் அழைக்கப்பட்டு இருந்தனர்.
இன்று(நேற்று) மீண்டும் களஆய்வு மேற்கொண்ட போது இந்த குளத்தை சீரமைப்பதற்கு பல அவசர தேவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு மதுதொழிற்சாலை, ஒரு கழிவுநீர் வாய்க்கால் மற்றும் ஒரு தொழிற்பேட்டையால் சூழப்பட்டுள்ள இந்தகுளம் பாதுகாப்பதற்கான ஒரு நீர்த்தேக்கமாக உள்ளது. எனவே இந்த குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிகுளத்தை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நாளை(செவ்வாய்க்கிழமை) உழைப்பாளிகள் தினம். அன்றைய தினம் பொதுப்பணித்துறை, நகராட்சி, உள்ளாட்சி துறை உள்பட அனைத்து துறைகளும், பொதுமக்களும், தன்னார்வல தொண்டர்களும் ஒன்றிணைந்து குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அங்கு தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும். குளத்தின் கரையோரங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story