ராணுவத்தில் என்ஜினீயர்கள் சேர்ப்பு


ராணுவத்தில் என்ஜினீயர்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 30 April 2018 7:02 AM GMT (Updated: 2018-04-30T12:32:27+05:30)

இந்திய ராணுவத்தில் பட்டதாரி என்ஜினீயர்களை சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் அடிப் படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது 128-வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ் என்ற பயிற்சித் திட்டத்தில், பட்டதாரி என்ஜினீயர்கள், இந்திய ராணுவ அகாடமியில் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தம் 40 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர விரும்புபவர்கள் இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும். அவர்கள் 1-1-2019 தேதியில் 20 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சிவில், ஆர்கிடெக்சர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், டெலிகம்யூனிகேசன், மெட்டலர்ஜிகல், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் என்ஜினீயரிங் மற்றும் அது தொடர்புடைய பட்டப் படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டேராடூனில் உள்ள ராணுவ அகாடமியில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற்றபின் பணி நியமனம் பெறலாம். லெப்டினன்ட் அதிகாரி முதல் பிரிகேடியர், மேஜர் ஜெனரல் வரை பல்வேறு பதவி உயர்வுகளை பெறும் வாய்ப்பு மிக்க பணியாகும்.

உடல்திறன் தேர்வு, நுண்ணறிவுத் திறன் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16-5-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும். 

Next Story