அற்புதம் செய்யும் ‘ஹெட்செட்’


அற்புதம் செய்யும் ‘ஹெட்செட்’
x
தினத்தந்தி 30 April 2018 8:08 AM GMT (Updated: 2018-04-30T13:38:37+05:30)

அற்புதம் செய்யும் இந்த ஹெட்செட்டை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

நீங்கள் தொலைவில் இருந்தபடி நினைவின் வழியே கணினியை இயக்க உதவுகிறது இந்த ஹெட்செட். அதே நேரத்தில் இதை மாட்டிக் கொண்டு ஷாப்பிங் கிளம்பினால், நீங்கள் தேர்வு செய்யும் பொருட்களின் விலைகளின் கூட்டுத் தொகையை அறிவிக்கும், காலாவதி நாள் குறைவாக இருந்தால் எச்சரிக்கும், அதேபோல் செஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட போட்டியில் விளையாடும்போது உங்கள் வெற்றி வாய்ப்புகளுக்கான டிப்ஸ் வழங்கும், இன்னும் பல்வேறு விதங்களில் உதவும் இந்த ஹெட்செட், செயற்கை அறிவு நுட்பத்தில் செயல்படக்கூடியது. எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மீடியா லேப் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர் அர்னவ் கபூர் (இந்தியர்) தலைமையிலான ஆய்வுக்குழுவினர் இதை உருவாக்கி பரிசோதித்து வருகிறார்கள். இந்த திட்டத்திற்கு ‘அல்டர் எகோ புராஜெக்ட்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். அற்புதம் செய்யும் இந்த ஹெட்செட்டை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடக்கிறது. 

Next Story