புற்றுநோயை காட்டிக் கொடுக்கும் செயற்கை மச்சம்!


புற்றுநோயை காட்டிக் கொடுக்கும் செயற்கை மச்சம்!
x
தினத்தந்தி 30 April 2018 8:16 AM GMT (Updated: 30 April 2018 8:16 AM GMT)

உலகெங்கிலும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கையும், அது குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.

புற்றுநோயின் ஆரம்பத்தை கண்டறிந்தால் மட்டுமே சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே புற்றுநோயின் ஆரம்பத்தை கண்டுபிடிக்க, சுவிட்சர்லாந்தின் சூரிச் ஈ.டி.எச். அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ஒரு புதிய வழியை உருவாக்கி உள்ளது. இதற்காக நானோ துகள்களால் ஆன சிறிய சிப்பை உடலுக்குள் செலுத்துகிறார்கள். அது ரத்தத்தில் கால்சியத்தின் அளவு உயர்வதை அடிப்படையாகக் கொண்டு புற்றுநோய் அறிகுறியை கணிக்கிறது.

அப்படி புற்றுநோய் ஆபத்து இருந்தால் உடலில் செயற்கையாக மச்சத்தை தோன்ற வைத்து அபாயத்தை காட்டிக் கொடுக்கிறது. இது புற்றுநோயை ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை பெற ஏதுவாகிறது. இரைப்பை, நுரையீரல், மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்ற பொதுவான புற்றுநோய்களை கண்டறியும் வகையில் இந்த நானோ சிப் நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரபியல் ரீதியாக புற்றுநோய் தோன்றும் வாய்ப்புடையவர்கள், ஆபத்தான இடங்களில் பணிபுரிபவர்கள், வசிப்பவர்கள் இந்த நானோ சிப்களை உடலில் செலுத்திக் கொண்டால் புற்றுநோய் ஆபத்தை அறிந்து தற்காத்துக் கொள்ளலாம். இந்த நுட்பம் பயன்பாட்டிற்கு வர சில ஆண்டு காலம் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story