பாலியல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் அப்ளிகேசன்


பாலியல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் அப்ளிகேசன்
x
தினத்தந்தி 30 April 2018 9:32 AM GMT (Updated: 2018-04-30T15:02:14+05:30)

இணையதளங்களில் முகம் தெரியாமல் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் கணிசமாக அதிகரித்து வருகிறார்கள்.

நாளுக்குநாள் சைபர் கிரைம்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இணைய தளங்களில் முகம் தெரியாமல் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் கணிசமாக அதிகரித்து வருகிறார்கள். குழந்தைகள்கூட இந்த பாலியல் தாக்குதலுக்கு இரையாகிறார்கள். இதனால் மன உளைச்சலுக்கும், உயிர்ப்பலிக்கும் ஆளானவர்கள் அதிகம்.

தற்போது இணையதளம் வழியாக பாலியல் வக்கிர எண்ணத்துடன் உரையாடுபவர்களை காட்டிக் கொடுக்கும் புதிய அப்ளிகேசன் வடிவமைக் கப்பட்டுள்ளது. “சாட் அனலைசிஸ் டிரையேஜ் டூல்” (சி.ஏ.டி.டி.) எனப்படும் இந்த அப்ளிகேசன் காவல்துறைக்கு கைகொடுக்கும் வகையில் உள்ளது. இண்டியானாவின் பர்டியூ பல்கலை க்கழக பேராசிரியர் மற்றும் குழுவினர் இதை வடிவமை த்துள்ளனர்.

குழந்தை களுடன் உரையாடும் நபர் அவர் கேட்கும் கேள்விகள், பரிசு வழங்குதல், வெளியிடும் கருத்துகள், படங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அவர் பாலியல் வக்கிர எண்ணத்துடன் செயல்படுகிறாரா? என்பதை முன்கூட்டியே கணித்துவிடும். 4 ஆயிரத்து 353 உரையாடல்களை கணித்து அவற்றில் 107 உரையாடல்கள் குற்றத்திற்குரிய வகையில் இருந்ததை ஆய்வின்போது கண்டறியப்பட்டது. மேலும் பாலியல் குற்றம் கண்டறியப்பட்டால் அது காவல்துறைக்கும் நிகழ் நேரத்தில் தகவல் அனுப்பி எச்சரிக்கைப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இது பாலியல் குற்றங்களை வெகுவாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி சமூக வலைத்தளங்களும் இதுபோன்ற அப்ளிகேசன்களை இணைத்து செயல்படுத்தும்போது சைபர் பாலியல் குற்றவாளிகள் பலர் அகப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை! 

Next Story