விளாத்திகுளம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு
விளாத்திகுளம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.
விளாத்திகுளம்,
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் கண்ணப்பர் தெருவைச் சேர்ந்தவர் வீரணன். கொத்தனார். இவருடைய மகன் கந்தவேல் (வயது 16). இவர் 8-ம் வகுப்பு படித்து விட்டு, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர் நேற்று மதியம் புதூர் சுடுகாட்டுக்கு பின்புறம் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது கந்தவேல் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, கந்தவேலின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவில் கந்தவேலின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.
இதுகுறித்து புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி மற்றும் போலீசார், இறந்த கந்தவேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story