காயல்பட்டினத்தில் கலங்கிய நிலையில் குடிநீர் வினியோகம்; பொதுமக்கள் அவதி


காயல்பட்டினத்தில் கலங்கிய நிலையில் குடிநீர் வினியோகம்; பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 1 May 2018 4:15 AM IST (Updated: 1 May 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் கலங்கிய நிலையில் குடிநீர் வினியோகத்தினால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஆறுமுகநேரி,

காயல்பட்டினத்தில் ரூ.29 கோடியே 68 லட்சம் செலவில் 2-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உறைகிணறுகள் அமைத்து, அங்கிருந்து காயல்பட்டினத்துக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் காயல்பட்டினத்தில் கடந்த 3 நாட்களாக குடிநீர் கலங்கிய நிலையில் மஞ்சள் நிறத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த தண்ணீரை குடிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து நகரசபை சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன், நகரசபை என்ஜினீயர் சுரேஷ் ஆகியோரிடம் கேட்டபோது, தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள உறைகிணறுகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் கலங்கலாக உள்ளது.

இதனை விரைவில் சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.

Next Story