மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி


மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 1 May 2018 4:15 AM IST (Updated: 1 May 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி சென்னை கமிஷனர் அலுவலகம் முன்பு பரபரப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை,

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மதியம் தனது மனைவி நளாயினி, மகன் செல்வகுமார் (வயது22) ஆகியோருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். திடீரென்று பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்தார். அதை தன் மீதும், மனைவி, மகன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சுதாரித்துக்கொண்டு அவர்களை உடனடியாக காப்பாற்றினர்.

பின்னர் அவர்கள் விசாரணைக்காக வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாஸ்கரிடம் வேப்பேரி போலீஸ் இன்பெக்டர் வீரக்குமார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பாஸ்கர் கூறியதாவது.

எனது மகன் செல்வகுமாருக்கு தொண்டையில் கட்டி இருந்தது. இதற்காக சென்னை பரங்கிமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தபோது, புற்றுநோய் என்று கூறி ஆபரேசன் செய்தனர். எனினும் அவன் குணமடையாததால், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அப்போது எனது மகனுக்கு புற்றுநோய் இல்லை. காசநோய் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே தவறான சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது பரங்கிமலை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது என்னுடைய மகன் உடல்நிலை மோசமாக உள்ளது. எனவே தான் குடும்பத்துடன் தீக்குளிக்க முடிவு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் தொடர்பாக செல்வகுமார் 2 பக்கத்தில் புகார் மனுவும் அளித்தார். அவர்கள் மீண்டும் பரங்கிமலை போலீஸ்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story