விருத்தாசலம் அருகே கோவில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 200 பேருக்கு வாந்தி, மயக்கம்
விருத்தாசலம் அருகே கோவில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 200 பேருக்கு வாந்தி, மயங்கம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் தண்டபாணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள வி.சாத்தமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 20-ந்தேதி முதல் சித்திரை பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் வி.சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி அன்றைய தினம் மாலை கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட பெரும்பாலான பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் கோவில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட வி.சாத்தமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 36), மகாதேவன்(31), நிதிஷ்(12), ஜெயந்தி(23), வேலன்(7), ராதாகிருஷ்ணன்(29), ராகுல்(14), மல்லிகைக்கண்ணன்(28). ரவிவர்மன்(23), தீபா(24), ஜெயந்தி(38), திவ்யா(20), கவிதா(26), பூராயர்(53), சிந்துனேஷ்(26), சுரேஷ்(36), விஜயகுமார்(12), வீராயி(50), ராஜேஷ்வரி(14), மகேஷ்(32), திவ்யா(21), சுபஸ்ரீ(18), சவிதா(21), நாவம்மாள்(50), சுமதி(20), சுவேதா(18), பிரபு(35), பிரேமா(35), நீதிராஜன்(14), கொளஞ்சி(50) உள்ளிட்ட 200 பேருக்கு நள்ளிரவில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மயங்கி விழுந்த 200 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை பார்ப்பதற்காக உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விருத்தாசலம் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் தண்டபாணி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து கலெக்டர் தண்டபாணி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது விருத்தாசலம் தாசில்தார் ஸ்ரீதரன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன், கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி, வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், துணை தாசில்தார் முருகன், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் அன்னதானத்தை சாப்பிட்ட பக்தர்களுக்கு ஏற்பட்ட வாந்தி, மயக்கம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என்றும், வி.சாத்தமங்கலம் கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் முகாம் அமைத்து அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புலிகேசி தலைமையிலான மருத்துவக்குழுவினர் வி.சாத்தமங்கலம் கிராமத்தில் முகாமிட்டு, அனைவருக்கும் பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே கோவில் வளாகத்தில் வழங்கப்பட்டதில் மீதம் இருந்த உணவு மற்றும் குடிநீர் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், வி.சாத்தமங்கலம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத் தை சாப்பிட்ட 200 பேருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் காலாவதியானதா? அல்லது சாம்பார், ரசத்தில் பல்லி ஏதும் விழுந்துவிட்டதா? என விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் உணவு, குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் தான் எதனால் கிராம மக்கள் 200 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது என தெரியவரும் என்றனர். கோவில் திருவிழாவின்போது வழக்கப்பட்ட அன்னதானம் சாப்பிட்ட 200 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story