திருப்பூர் கூட்டுறவு நகர வங்கியின் முன்பு தி.மு.க.வினர் சமையல் செய்து போராட்டம்
திருப்பூர் நகர கூட்டுறவு வங்கியில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாததால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க.வினர் இரவு வரை வங்கிக்கு முன்பு காத்திருந்து சமையல் செய்து போராட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் குமரன் ரோட்டில் திருப்பூர் கூட்டுறவு நகர வங்கி உள்ளது. இந்த வங்கியில் 55 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தின் 11 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வேட்பு மனு தாக்கல் நடந்தது. காலை 7 மணி முதலே கூட்டுறவு வங்கி வளாகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய அதிகம் பேர் திரண்டனர். தேர்தல் அதிகாரியாக முத்து இருந்தார்.
இந்தநிலையில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய காலை 10 மணிக்கு அங்கு வந்தனர். ஆனால் வங்கியின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், தொ.மு.ச. மாநில துணை செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வங்கிக்கு முன்பு தரையில் அமர்ந்து தொடர் தர்ணா செய்தார்கள்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் வந்திருந்த 11 பேர் வங்கி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனு செய்ய காத்திருந்தார்கள். தி.மு.க.வினரும் காத்திருந்தனர். மாலை 5 மணிக்கு பிறகு வேட்பு மனு நேரம் முடிந்து விட்டதாக கூறி தேர்தல் அதிகாரி அங்கிருந்து சென்று விட்டார். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்ய காத்திருந்த தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். தங்களிடம் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் தேர்தல் அதிகாரி சென்று விட்டதாக கூறி வங்கி வளாகத்துக்குள்ளேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற நிர்வாகிகள் வங்கிக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.
வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர்கள் பிச்சையா, சையத் பாபு மற்றும் போலீசார் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. அதன்பிறகு இரவு 7 மணி அளவில் வங்கிக்கு முன்பு கியாஸ் அடுப்பு வைத்து தி.மு.க.வினர் சமையல் செய்தனர். இரவு 8 மணி அளவில் தேர்தல் அதிகாரி முத்துவை போலீசார் வங்கி வளாகத்துக்கு அழைத்து வந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய காத்திருந்த தங்களிடம் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பின்வாசல் வழியாக சென்றது ஏன்? என்று தி.மு.க.வினர் கேட்டனர். அதற்கு தேர்தல் அதிகாரி, 34 பேரின் வேட்பு மனு பெறப்பட்டதாகவும், அதன்பிறகு மாலை 5 மணியாகிவிட்டதால் வேட்பு மனு யாரிடமும் வாங்க முடியாது என்றும் தெரிவித்தார். இந்த விவரத்தை தங்களிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டனர். வேட்பு மனு ஏற்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை அறிவிப்பு பலகையில் தேர்தல் அதிகாரி ஒட்ட முயன்றார். ஆனால் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒட்டாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
வங்கி தேர்தல் தொடர்பாக கோர்ட்டு மூலம் தீர்வு காணப்படும் என்றும், கட்சி தலைமையின் அனுமதி பெற்று தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் க.செல்வராஜ் தங்களது நிர்வாகிகளிடம் கூறினார். அதன்பிறகு, சமைத்த உணவை சாப்பிட்டு விட்டு தி.மு.க.வினர் அனைவரும் அங்கிருந்து இரவு 9.15 மணி அளவில் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் காலை முதல் இரவு வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story