காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மெரினாவில் தடையை மீறி போராட்டம் - அய்யாக்கண்ணு பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று ஈரோட்டில் அய்யாக்கண்ணு கூறினார்.
ஈரோடு,
விவசாயத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யக்கோரி தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 100 நாட்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஈரோட்டிற்கு நேற்று வந்த அவர்கள் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
முன்னதாக அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்காமலும், சாகுபடி செய்வதற்கு தண்ணீர் கொடுக்காமலும் மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி வருகின்றன. விவசாயிகள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்து வரும் இந்த சூழ்நிலையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு தமிழகத்தை பாலைவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகளை சாகுபடி செய்ய ஊக்கப் படுத்தப்படுகிறது. இதனால் 50 சதவீதம் ஆண்கள் ஆண்மையை இழக்கும் அபாயமும், 50 சதவீதம் பெண்கள் கருத்தரித்தல் சக்தியை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கக்கோரி நாங்கள் 100 நாட்கள் பயணம் மேற்கொண்டு வருகிறோம். மொத்தம் 21 மாவட்டங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி வருகிறோம். 61-வது நாள் சுற்றுப்பயணமாக ஈரோட்டிற்கு வந்து உள்ளோம்.
அனைத்து மாவட்ட கலெக்டர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வருகிறோம். அப்போது இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேண்டும். ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பிராய்லர் கோழிகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.
எங்களது பயணத்தின் முடிவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளோம். அவரும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து மனு அளிப்போம். அதன்பின்னர் கோரிக்கை நிறைவேறும் வரை டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக உத்தரவிட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு கர்நாடக மாநில தேர்தலை காரணம் காட்டி காலம் தாழ்த்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக எங்கள் தரப்பு வக்கீல்கள் முத்துக்கிருஷ்ணன், மனோஜ், லெனின், ராஜாராம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் டெல்லிக்கு சென்று உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எங்களது விழிப்புணர்வு பயணம் நிறைவடைந்த பிறகு வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதி முதல் சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

Related Tags :
Next Story