கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் ரூ.2.25 கோடி மோசடி
இழப்பீட்டு தொகையில் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் மோசடி செய்ததாக வக்கீல் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கும்பகோணம்,
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் மோசடி செய்ததாக வக்கீல் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் கும்பகோணம் சத்திரம் கருப்பூர் மெயின் சாலை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் திவ்யாவும் ஒருவர். தற்போது இவருக்கு 22 வயது ஆகிறது. இவர் தஞ்சை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்து உயிர் தப்பியவர்களில் நானும் ஒருவர். என்னைப்போல் முகத்தில் தீக்காயம் அடைந்தவர்களுக்கும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் இழப்பீடு கிடைப்பதற்கு கோர்ட்டு மூலமாக முயற்சி மேற்கொண்டோம். அப்போது எங்களைப்போல் பாதிக்கப்பட்ட இன்பராஜ் என்பவர் மூலமாக சென்னை கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் விஜயரெங்கன் தெருவை சேர்ந்த வக்கீல் தமிழரசன் அறிமுகமானார். அவர் கோர்ட்டு மூலமாக உரிய இழப்பீட்டை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதநேயத்துடன் நியாயமாக செயல்பட்டு பெற்று தருவதாக கூறினார்.
அதன்படி தகுந்த இழப்பீட்டு தொகை பெறுவதற்காக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கு செலவிற்காக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை வக்கீல் தமிழரசன் பெற்றுக்கொண்டார். இந்த வழக்கு ஒரு நபர் விசாரணை ஆணையம் மூலம் விசாரிக்கப்பட்டு, உயிரிழந்த 94 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், படுகாயம் அடைந்த குழந்தைகளில் 3 பேருக்கு தலா ரூ.6 லட்சம், நான் உள்பட 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த தொகையுடன் 12 ஆண்டுகளுக்கான வட்டியை கணக்கிட்டு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி எங்களுடைய வங்கி கணக்குகளில் இழப்பீட்டு தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதனிடையே வக்கீல் தமிழரசன் எங்களிடம் 2 வெற்று காசோலைகளிலும், வெற்று பேப்பரிலும் கையெழுத்து பெற்றிருந்தார். அதன் பிறகு எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.30 லட்சத்தை காசோலை மூலம் தமிழரசன் எடுத்து கொண்டார். பணத்தை எடுத்து கொண்ட தகவலை தமிழரசன் எங்களுக்கு தெரிவிக்கவில்லை.
மொத்தம் 100 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 கோடியே 30 லட்சத்தை அவர் எடுத்து கொண்டார். இழப்பீடாக கிடைத்த தொகையில் இருந்து எங்களிடம் கேட்காமல் பணத்தை எடுத்து அவர் மோசடி செய்து உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வக்கீல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டிலும் முறையிடப்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு, வக்கீல் தமிழரசன் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி வக்கீல் தமிழரசன் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story