தண்டவாள பராமரிப்பு பணிக்காக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தில் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணிக்காக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 1 May 2018 4:40 AM IST (Updated: 1 May 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர்–வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால், அந்தப் பாதையில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

அதன்படி, திருவனந்தபுரம்–திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) மற்றும் வருகிற 5–ந் தேதி திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.50 மணிக்கு பதிலாக மதியம் 12.50 மணிக்கு புறப்படும். இதனால், இந்த ரெயில் மதுரைக்கு மாலை 5 மணிக்கு பதிலாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி ரெயில் நிலையத்துக்கு சுமார் 1½ மணி நேரம் தாமதமாக சென்றடையும்.

அதேபோல, பாலக்காடு–திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் நாளை(புதன்கிழமை) மற்றும் வருகிற 5–ந் தேதி ஆகிய நாட்களில் மட்டும் விருதுநகர்–நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில் நாளை(புதன்கிழமை) மற்றும் வருகிற 5–ந் தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் நெல்லை–விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

 இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வீராசுவாமி தெரிவித்துள்ளார்.

Next Story