போதைப்பொருள் பாதிப்பு குறித்து ஆராய நிபுணர் குழு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் பாதிப்பு குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்கவேண்டும் என்று அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில், போதைப்பொருட்களால் உடல்நிலை பாதிப்படைந்த 18 குழந்தைகள் மற்றும் 25 பெண்கள் உள்பட பலர் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பாரதி டாங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மராட்டியத்தில் போதைப்பொருட்கள் பயன்பாட்டால் பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய மராட்டிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் நிபுணர் குழு அமைக்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கூடுதல் இயக்குனர் அந்தஸ்திலான மருத்துவஅதிகாரி மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த குழு இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த குழுவின் மூலம் நான்கு மாதங்களுக்குள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு கூறி நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Tags :
Next Story