இன்று மராட்டிய தின விழா: கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்
மராட்டிய தினத்தையொட்டி தாதர் சிவாஜி பார்க்கில் இன்று நடைபெறும் விழாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ் தேசிய கொடி ஏற்றுகிறார்.
மும்பை,
மும்பையுடன் சேர்ந்த மராட்டிய மாநிலம் கடந்த 1960-ம் ஆண்டு மே 1-ந் தேதி உருவானது. எனவே ஆண்டுதோறும் மே 1-ந் தேதி மராட்டிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) தாதர் சிவாஜி பார்க்கில் அரசு சார்பில் மராட்டிய தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் காலை 8 மணியளவில் கவர்னர் வித்யாசாகர் ராவ் தேசிய கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து அவர் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் பல்வேறு பாதுகாப்பு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.
பின்னர் கவர்னர் மராட்டிய தின உரையாற்றுகிறார். இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த விழாவில் முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மந்திரிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
இதுதவிர இன்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் மராட்டிய தினம் கொண்டாடப்படுகிறது. மராட்டிய தினத்தையொட்டி இன்று மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் பூட்டப்பட்டு இருக்கும்.

Related Tags :
Next Story