குறைதீர்க்கும் கூட்டத்தில் 14 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ரோகிணி வழங்கினார்
குறைதீர்க்கும் கூட்டத்தில் 14 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 463 மனுக்களை கொடுத்தனர். தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 3 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை, 2 பேருக்கு சக்கர நாற்காலி, ஒருவருக்கு சக்கர மிதிவண்டி, 8 முதியோர்களுக்கு உதவி தொகைக்கான ஆணை என மொத்தம் 14 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார். இதில் காரில் வந்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு நிதி உதவிக்கான ஆணையை நேரில் சென்று கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் உதவி கலெக்டர் சாரதா ருக்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story