மார்த்தாண்டம் அருகே காரை வழிமறித்து ராணுவ வீரர் உள்பட 2 பேரை தாக்கி நகை பறிப்பு
நகைகளை பறித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே காரை வழிமறித்து ராணுவ வீரர் உள்பட 2 பேரை தாக்கி நகைகளை பறித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்புகுட்டன் மகன் அஜித் (வயது 29). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று அஜித் தனது காரில் பயணம்-திக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது சித்தி மகன் உள்பட 2 பேர் உடனிருந்தனர்.
அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அந்த காரை வழிமறித்து நிறுத்தியது. காரை நிறுத்தியவுடன் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கார் கண்ணாடியை அடித்து உடைத்து அஜித்தை சரமாரியாக தாக்கினர்.
மேலும் அஜித் அணிந்திருந்த 2பவுன் தங்க சங்கிலியையும், அவரது சித்தி மகனிடமிருந்து 3பவுன் தங்க சங்கிலியையும் பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து அஜித் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி 10 பேர் கும்பலை வலை வீசி தேடி வருகிறார்.

Related Tags :
Next Story