நாகர்கோவிலில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
திருமணமான சில நாட்களில் மனைவி பிரிந்து சென்றதால் இந்த விபரீத முடிவு எடுத்தார்.
நாகர்கோவில்,
திருமணமான சில நாட்களில் மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாகர்கோவில் கோட்டார் தோப்பு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 35). தங்க நகை செய்யும் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், செட்டிகுளத்தை சேர்ந்த சுதா என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு சில தினங்களிலேயே கணவனுக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சுதா மனவேதனை அடைந்தார். பின்னர் தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் முருகன் சோகத்தில் காணப்பட்டார். அதன் பிறகு முருகனின் உறவினர்கள் சுதா வீட்டுக்கு சென்று அவரை சமாதானம் செய்தனர். ஆனால் கணவர் வீட்டுக்கு வர சுதா மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த முருகன் கடந்த சில நாட்களுக்கு முன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை முருகன் பரிதாபமாக இறந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story