தூத்துக்குடியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.5.75 லட்சம் நகை திருட்டு
தூத்துக்குடியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.5.75 லட்சம் நகைகள் திருட்டப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.5¾ லட்சம் மதிப்புள்ள நகையை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி எஸ்.பி.எம்.நகரை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவருடைய மகன் உமாராம் (வயது 34). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் மதுரைக்கு சென்று இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், வீட்டில் பீரோவில் இருந்த 2 வைர நெக்லஸ், மற்றும் 10 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உமாராம் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் வீட்டின் டிரைவர் ரவிகுமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உமாராம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story