நாகர்கோவில் அருகே குளத்தில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
நாகர்கோவில் அருகே குளத்தில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே குளத்தில் மூழ்கிய கல்லூரி மாணவர் நேற்று பிணமாக மீட்கப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூட்டை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் நிவின் (வயது 20). நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக ஆசாரிபள்ளத்தை அடுத்த வேம்பனூரில் வசிக்கும் அவருடைய சித்தி வீட்டில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் மாலையில் நிவினும், அவருடைய சித்தி மகன் ஆகாஷ் (17) என்பவரும் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றனர்.
குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற நிவின் திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டார். அவரை ஆகாஷ் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் ஆகாஷ் வீட்டுக்கு சென்று உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதற்கிடையே இச்சம்பவம் பற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கிய நிவினை தேடினர். வெகு நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இருள் சூழ்ந்துவிட்டதால் தேடும் பணியை தொடர முடியவில்லை. இந்த நிலையில் குளத்தில் மூழ்கிய நிவினை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நடந்தது. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு குளத்தில் இருந்து நிவின் பிணமாக மீட்கப்பட்டார். குளத்தின் ஒரு பகுதியில் இருந்த சகதியில் அவரது உடல் சிக்கி இருந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து நிவினின் உடலை வெள்ளிச்சந்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story