அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே பிரதமரை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே பிரதமரை சந்திக்கிறார் என பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டினார்.
நாகர்கோவில்,
அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே பிரதமர் நரேந்திரமோடியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் தற்போது பறிக்கப்பட்டு வருகிறது. நிரந்தர பணி என்பதை தற்காலிக பணியாக மாற்றி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் வரைவு செயல் திட்டத்தை 3-ந் தேதி (அதாவது நாளை) மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். கர்நாடகாவில் தேர்தல் நடக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை பா.ஜனதா அரசு அமைக்காது. தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளை ரசாயன பகுதிகளாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமரை சந்திக்க இருப்பதாக சொல்கிறார்கள். இவர் அடிக்கடி பிரதமரை சந்தித்தாலும் தமிழக நலனுக்கான திட்டங்களை கேட்டு பெறுவதில்லை. அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே பிரதமரை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சுழல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்காகவே அதை எதிர்த்து போராடுகிறார்கள். மக்கள் எதை வேண்டாம் என்கிறார்களோ அதைத் தான் மத்திய அரசு செய்கிறது.
தமிழக அரசு அடுக்கடுக்கான ஊழலில் ஈடுபடுகிறது. குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோவையில் குட்கா தயாரிப்பு ஆலை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இங்கிருந்து தான் வெளிநாடுகளுக்கு குட்கா ஏற்றுமதி செய்யப்படுகிறதோ? என்று சந்தேகம் எழுந்துள்ளது. கூட்டுறவு துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. கூட்டுறவு வங்கிகளில் தங்க நகை மோசடி நடந்துள்ளது. வங்கிகளில் போலி நகைகள் வைக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் ஒகி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் முழுமையாக வழங்கப்படவில்லை.
காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க 3-ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடக்க உள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்த பிறகும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பொது இடங்களில் அநாகரிகமாக பேசிய எச்.ராஜா மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மணி மற்றும் கட்சி நிர்வாகிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியபோது, ‘தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தமிழகத்துக்கு வந்து கருணாநிதியை சந்தித்துள்ளார். சந்திப்பு பற்றி கேட்டபோது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை பெறுவது பற்றி ஆலோசனை நடத்தியதாகவும், 3-வது அணி அமைய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். 3-வது அணி அமைந்தால் அது பா.ஜனதாவின் ‘பி’ அணியாக தான் இருக்கும்’ என்றார்.

Related Tags :
Next Story