அடிப்படை வசதிகள் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலரை கிராம மக்கள் சிறைபிடிப்பு
வத்தலக்குண்டு அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலரை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு அருகே கட்டக்காமன்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊர் தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலர் அமுதவள்ளி பார்வையாளராக வந் திருந் தார். ஊராட்சி செயலாளர் பிரபு வரவேற்றார். கூட்டம் தொடங்கியதும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என வலியுறுத் தினர்.
இதற்கு பதில் கூறாத ஊராட்சி ஒன்றிய அலுவலரை கிராம மக்கள் முற்றுகை யிட்டனர். இதையடுத்து வெளியே செல்ல முயன்ற அவரை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டி சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊர் பெரியவர்கள் கிராம மக்களை சமரசம் செய்ததை தொடர்ந்து கூட்டம் அமைதியாக நடந்தது.
ஜி.தும்மலப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத் திற்கு ஊர் பெரியவர் உதயகுமார் தலைமை தாங்கினார். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா சிறப்பு பார்வை யாளராக பங்கேற்றார். பார்வையாளராக சமூக நல அலுவலர் வேலாத்தா வந்திருந் தார். ஊராட்சி செயலாளர் பிரபு வரவேற்றார். எழுவனம் பட்டியில் ஊர் பெரியவர் சாமிக்கண்ணு தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. பார்வையாளராக இளநிலை உதவியாளர் ராமசாமி கலந்துகொண்டார். ஊராட்சி செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார்.
விராலிப்பட்டியில் நடந்த கூட்டத்துக்கு ஊர் தலைவர் பாண்டி தலைமை வகித்தார். பார்வையாளராக இளநிலை உதவியாளர் முனியாண்டி வந்திருந்தார். ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். ரெங்கப்பநாயக் கன் பட்டியில் நடந்த கூட்டத்திற்கு ஊர் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்மேகம் பார்வையாளராக வந்திருந்தார். ஊராட்சி செயலாளர் செல்லத்துரை வரவேற்றார்.
சந்தையூரில் நடந்த கூட்டத்திற்கு ஊர் தலைவர் பழனி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் ஓவரசியர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பெரிச்சி வர வேற்றார். இதேபோல் விருவீடு, சந்தையூர், ரெங்கப்ப நாயக்கன்பட்டி, விராலி மாயன்பட்டி, நடகோட்டை ஆகிய பகுதிகளில் கிராமசபை கூட்டங்களில் முடிவடைந்த 58-ம் கால்வாய்களில் வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் பூண்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில், மே தினத்தையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜன் வழங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள், சுய உதவிக் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கோபி நன்றி கூறினார்.
பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு ஊராட்சியில் உள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பணிமேற்பார்வையாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செய லாளர் சிவராஜன் வரவேற் றார். ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால சுப்பிரமணியன், மண்டல அமைப்பாளர் சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண் டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி களை மேம்படுத்துவது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேவரப் பன்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கணக்காளர் சேது ராமன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கண் ணன் வரவேற்றார். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள் ளுதல், சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்து தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதே போல் பழனியை அடுத்த புஸ்பத்தூர் ஊராட்சி யில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது அடிப்படை வசதிகள் சம்பந்த மாக கேட்ட போது சரிவர பதில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி அப்பகுதி பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் புஸ்பத்தூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் அமர்ந்து ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட்ட னர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார் பச்சைமுத்து, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அ.கலையம்புத்தூர் ஊராட்சி யிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை, குளியல் அறை, கைபிடியுடன் கூடிய படிக்கட் டுகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண் டும் என்று கூறி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் 10-க்கும் மேற் பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை யான் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்ற னர்.
Related Tags :
Next Story