கூடுதலாக தடுப்பு சுவர்கள் கட்டும் பணி தீவிரம்
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் சாலையின் பாதுகாப்பு கருதி கூடுதலாக தடுப்பு சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை. எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை உள்ளது. இந்த பகுதிகளில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் புதிதாக சாலை அமைக்கப்பட்டு சாலையின் பாதுகாப்பு கருதி தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியை காண தினமும் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
அதுபோல தனுஷ்கோடி கடல் பகுதி எப்போதும் கடல்கொந்தளிப்பாகவே காணப்பட்டு வருவதால் கடல் அலைகளின் வேகத்தால் கடற்கரை பகுதிகளில் அதிகமாக மண் அரிப்பு எற்பட்டு வருகிறது. மண் அரிப்பால் புதிய சாலை மற்றும் சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு சுவர்களும் பாதிப்படையவும் வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகின்றது.
இந்தநிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை-கம்பிப்பாடு கடற்கரை பகுதி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் கூடுதலாக புதிய தடுப்பு சுவர்கள் கட்டும் பணி தேசிய நெடுஞ் சாலைதுறை மூலம் நடைபெற்று வருகிறது. அதற்காக கடற்கரை பகுதியில் 1½ மீட்டர் ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டு தடுப்பு சுவர்கள் கட்டப்படவுள்ளன. அதற்காக பெரிய கற்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு கடற்கரையில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி இன்னும் 3 மாதத்திற்குள் முடிவடையலாம் என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக கடல் பயங்கர கொந்தளிப்பாக காணப்படுகிறது. குறிப்பாக மாலையில் இருந்து இரவு வரை கடல் அலைகள் தடுப்பு சுவரை தாண்டி பிரதான சாலை வரை வந்து செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கம்பிப்பாடு-அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட பகுதியில் தடுப்பு சுவர்கள் சேதமடைந்தன. அதைதொடர்ந்து அந்த பகுதியில் லாரிகள் மூலம் பாறாங்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.

Related Tags :
Next Story