லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி


லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 2 May 2018 5:01 AM IST (Updated: 2 May 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

மறைமலைநகர் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

வண்டலூர்,

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவர் மறைமலைநகரில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சரவணன் மறைமலைநகரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மறைமலைநகர் தனியார் கார் தொழிற்சாலை அருகே செல்லும் போது திடீரென சாலை ஓரமாக நின்றுக்கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story