விவசாயியை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது
தாரமங்கலம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாரமங்கலம்
தாரமங்கலம் கத்திமாறன்வளவு பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 59) விவசாயி. இவரது மகள் சொர்ணலதா (20). அதே பகுதியை சேர்ந்த பிரகாசும் (26) சொர்ணலதாவும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது சொர்ண லதா கர்ப்பமாக உள்ளார். இந்தநிலையில் பிரகாசுக்கும், சொர்ணலதாவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபித் துக்கொண்டு சொர்ணலதா தந்தை மாதையன் வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் பிரகாஷ் தந்தை பழனிசாமி (60), நண்பர்கள் கார்த்தி (20), இருசப்பன் (24) ஆகியோரை அழைத்துக்கொண்டு மாதையன் வீட்டிற்கு சென்று சொர்ணலதாவை அனுப்பி வைக்குமாறு சமாதானம் பேசினார். அப்போது சொர்ணலதாவை பிரகாசுடன் அனுப்பி வைக்க மாதையன் மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் உறவினர்கள் மாதையனை அரிவாளால் வெட்டினர். மேலும் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மாதையன் ஓமலூர் அரசு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story