சூறைக்காற்றுடன் மழை: மரம் முறிந்து விழுந்து 8 வயது சிறுவன் சாவு
பாப்பாரப்பட்டி அருகே சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் வேப்பமரம் முறிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் இறந்தான்.
பாப்பாரப்பட்டி,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பாப்பாரப்பட்டி அருகே பூகான அள்ளியை சேர்ந்தவர் தொழிலாளி பழனிசாமி. இவரது 2-வது மகன் பூமணி (வயது 8). 3-ம் வகுப்பு மாணவன். இவன் நேற்று மாலை வீட்டு முன் கட்டிலில் உட்கார்ந்து இருந்தான்.
அப்போது சூறைக்காற்று அடித்தபோது, அருகில் இருந்த வேப்பமரம் முறிந்து அவன் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சிறுவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதேபோல பாப்பாரபட்டி - தர்மபுரி சாலையில் உள்ள தட்டாரப்பட்டியில் சூறைக்காற்றுக்கு புளியமரம் சரிந்து விழுந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏரியூர்
ஏரியூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் சாலையோரத்தில் ஆங்காங்கே இருந்த மரங்கள் சாய்ந்தன. மேலும் சில வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

Related Tags :
Next Story