விபத்தில் காயம் அடைந்த பெண்ணுக்கு ரூ.39 லட்சம் நஷ்ட ஈடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு


விபத்தில் காயம் அடைந்த பெண்ணுக்கு ரூ.39 லட்சம் நஷ்ட ஈடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 May 2018 3:45 AM IST (Updated: 3 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

கார் மீது லாரி மோதியதில் காயம் அடைந்த பெண்ணுக்கு ரூ.39 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த மத்தான்காடு சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி கவிதா(வயது42). இவர் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய தாயாருக்கு தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அவரை பார்ப்பதற்காக கடந்த 3-3-2017 அன்று கவிதா தனது கணவர் மற்றும் மகள் கனிஷ்காவுடன் காரில் தஞ்சைக்கு வந்தார். மன்னார்குடி-தஞ்சை சாலையில் வாண்டையார் இருப்பு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த கவிதா, தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.

ரூ.39 லட்சம் நஷ்டஈடு

இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கவிதா நஷ்ட ஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் மற்றும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை மாவட்ட கூடுதல் நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் விசாரித்து கவிதாவுக்கு ரூ.39 லட்சத்து 4 ஆயிரத்து 645 நஷ்டஈடு வழங்குமாறு தஞ்சை நேஷனல் இன்சூரன்ஸ் நிறு வனத்துக்கு உத்தரவிட்டார். 

Next Story