டிராவல்ஸ் நிறுவனர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு
பெரம்பலூரில் டிராவல்ஸ் நிறுவனர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருவிழாவிற்கு சென்றிருந்தார். பின்னர் மதியம் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
பரபரப்பு
இது குறித்து அவர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் மோப்பம் பிடித்த படி ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. மேலும் சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். டிராவல்ஸ் நிறுவனர் வீட்டில் நகை-பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story