கருங்கல் அருகே கேரளாவுக்கு கடத்திய 600 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
கருங்கல் அருகே கேரளாவுக்கு கடத்திய 600 லிட்டர் மண்எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கருங்கல்,
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் வருவாய் துறையின் மூலம் பறக்கும்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரிகளின் இந்த தீவிர கண்காணிப்பின் மூலம் அவ்வப்போது கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருங்கல் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தும்படி சைகை காட்டினார்கள். ஆனால் டிரைவர் வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார்.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வாகனங்களில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்றனர். பள்ளியாடி பகுதியில் சென்றபோது, அதிகாரிகள் விரட்டி வருவதை கண்ட டிரைவர் வேனை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
அதிகாரிகள் வேனை சோதனை செய்தபோது, அதில் மீனவர்களுக்கு மானியவிலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் 600 லிட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து இனயம் அரசு கிட்டங்கியிலும், வேனை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மண்எண்ணெய்யை கேரளாவுக்கு கடத்தியது தெரிய வந்தது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் யாருடையது? ஓட்டிவந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story