வாலிபர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள்-செல்போன்களை கொள்ளையடித்த மெக்கானிக் கைது
காரைக்கால் அருகே வாலிபர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள்-செல்போன்களை கொள்ளையடித்த மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காரைக்கால்,
காரைக்கால் அருகே உள்ள திருமலைராயன்பட்டினம் கருடப்பாளைய தெருவை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 26). இவர் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் கோபிநாத்(27), கார்த்தி (26) ஆகியோருடன் மேலவாஞ்சூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மதன்குமார், கோபிநாத், கார்த்தி ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி மதன்குமார், அவருடைய நண்பர் கோபிநாத் ஆகியோரிடம் இருந்த செல்போன்கள், மதன்குமாரின் மோட்டார்சைக்கிளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து மதன்குமார் திருமலைராயன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிகிறிடியன்பால், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் நாகை செல்லூரை சேர்ந்த அருண்குமார், அவருடைய நண்பர் காரைக்காலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் பிரேம்குமார் (39) ஆகிய 2 பேரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் நாகை பஸ் நிலையத்தில் பிரேம்குமார் நிற்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிரேம்குமாரை மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வாலிபர்களிடம் அரிவாளை காட்டி கொள்ளையடித்த மோட்டார் சைக்கிளை கும்பகோணத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் பிரேம்குமார் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பிரேம்குமாரிடம் இருந்த அரிவாள் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய அருண்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story