கண்மாய், அணைகளில் இருந்து 5,740 பேர் வண்டல் மண் எடுத்துள்ளனர், மாவட்ட நிர்வாகம் தகவல்


கண்மாய், அணைகளில் இருந்து 5,740 பேர் வண்டல் மண் எடுத்துள்ளனர், மாவட்ட நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 3 May 2018 3:30 AM IST (Updated: 3 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 5,740 பேர் கண்மாய், ஏரிகளில் மண் எடுத்து பயனடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பொதுப்பணித்துறை பராமரிப்பில் இயங்கும் 431 ஏரி, கண்மாய், குளம் ஆகியவற்றிலிருந்து விவசாயம், வீட்டு உபயோகம், மண்பாண்டம் செய்வதற்கு தேவையான வண்டல் மண், சவடுமண், கிராவல் போன்ற கனிமங்களை எடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ராஜபாளையம் தாலுகாவில் 53 கண்மாய்களில் இருந்து 543 பேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் 85 கண்மாய்களில், 1,010 பேருக்கும் சாத்தூர் தாலுகாவில் 30 கண்மாய்களில் 262 பேருக்கும், சிவகாசி தாலுகாவில் 35 கண்மாய்களில்இருந்து517 பேருக்கும், வெம்பக்கோட்டை தாலுகாவில் 53 கண்மாய்களில் 911 பேருக்கும், விருதுநகர் தாலுகாவில் 29 கண்மாய்களில் 469 பேருக்கும், அருப்புக்கோட்டை தாலுகாவில் 39 கண்மாய்களில் 608 பேருக்கும், திருச்சுழி தாலுகாவில் 23 கண்மாய்களில் 594 பேருக்கும், காரியாபட்டி தாலுகாவில் 43 கண்மாய்களில் 594 பேருக்கும், ஆனைக்குட்டம் அணையில் 13 பேருக்கும், வெம்பக்கோட்டை அணையில் 172 பேருக்கும், குல்லூர்சந்தை அணையில் 24 பேருக்கும், கொள்வார்பட்டி அணையில் 23 பேருக்கும் என மொத்தம் 5,508 கண்மாய்கள் மற்றும் 4 ஏரிகளில் 5,740 விவசாயிகளுக்கு வண்டல் மண், சவடுமண், கிராவல் போன்ற கனிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேவைப்படுபவர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள ஏரி, கண்மாய், குளம் குறித்த கிராம கணக்குகளுடனும் உரியஆவணங்களுடனும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம். மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story