அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீட்டின் மீது விழுந்ததில் பெண் பலி
அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீட்டின் மீது விழுந்ததில் பெண் பலியானார்.
அனுப்பர்பாளையம்,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் திருப்பதி (வயது 30). இவருடைய மனைவி ஐஸ்வர்யா (22). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், 1 வயதில் ஒரு மகளும் உள்ளனர். திருப்பதி குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர் அவினாசி ரோடு தண்ணீர்பந்தல் காலனி பகுதியில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் குடியிருந்து வருகிறார். மேலும் திருப்பதி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு திருப்பூரில் திடீரென மழை பெய்தது. மழை பெய்து முடிந்ததும் திருப்பதி தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். வீட்டினுள் ஐஸ்வர்யாவும், அவர்களுடைய வீட்டிற்கு விருந்துக்கு வந்து இருந்த 2 சிறுவர்களும் இருந்த னர். அப்போது திருப்பதி வீட்டை ஒட்டி உள்ள மணி என்கிற துரைசாமி என்பவருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள ஒரு பகுதி திடீரென்று இடிந்து திருப்பதி வீட்டின் மீது விழுந்தது.
இதனால் ஓடுகளும், கட்டிட இடிபாடுகளும், வீட்டிற்குள் இருந்த ஐஸ்வர்யா மற்றும் 2 சிறுவர்களும் விழுந்தது. இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவருடைய உடல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்ற 2 சிறுவர்களுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

Related Tags :
Next Story