தாம்பரத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறில், கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் நரேந்திரன். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி அனிதா(வயது 34). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகின்றது. இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது அனிதா, 5 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
அனிதா அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்றுமுன்தினம் மாலை நரேந்திரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி அனிதாவை வீட்டில் விட்டு விட்டு குழந்தையை மட்டும் அழைத்துச் சென்றார்.
நிகழ்ச்சி முடிந்து இரவு 10 மணியளவில் நரேந்திரன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டி பார்த்தும் அனிதா கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த நரேந்திரன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே அனிதா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார், அனிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனிதாவுக்கு திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் இது தொடர்பாக தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

Related Tags :
Next Story