பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு
பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.
கல்பாக்கம்,
வேலூர் மாவட்டம் பொன்னை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் போஸ்குமார் (வயது 20). கல்பாக்கம் அடுத்த சீக்கிணாங்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் அவருடன் பயிலும் நண்பரான அதே ஊரை சேர்ந்த அருண் (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கூவத்தூர் சென்றுவிட்டு கல்லூரி விடுதிக்கு திரும்பினார். சீக்கிணாங்குப்பம் வளைவில் வந்தபோது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கல்லூரி மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே போஸ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அருண் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவலறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் விரைந்து வந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story