திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த வணிகவியல் துறை மாணவர்கள் சந்திப்பு
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த வணிகவியல் துறை மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த வணிகவியல் துறை மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பழைய மாணவர்கள் சந்திப்பு
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1985 முதல் 1988 வரை வணிகவியல் துறையில் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் 45 பேர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அவர்கள் காலை முதல் ஒவ்வொருவராக கல்லூரிக்கு வரத் தொடங்கினர். அப்போது, தங்கள் பழைய நண்பர்களை பார்த்ததும் ஆர்வமாக ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். தாங்கள் படித்த வகுப்பறைகள், கல்லூரியில் தங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் நிகழ்ந்த பகுதிகளையும் பழைய மாணவர்கள் சென்று பார்த்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் அந்த சம்பவங்கள் குறித்து விளக்கி கூறினர்.
பின்னர் பழைய மாணவர்கள், கல்லூரி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் உருவச்சிலை, ஆதித்தனார் அறநிலைய முன்னாள் நிறுவனரும், ஆட்சிக்குழு தலைவருமான பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கலந்துரையாடல்
தொடர்ந்து பழைய மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் எஸ்.சண்முகராஜா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன், கல்வி அறநிலைய ஆலோசகர் உத்திரப்பாண்டியன், மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பழைய மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த பேராசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். பழைய மாணவர்கள் அனைவரும் பேராசிரியர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
விழா நிகழ்ச்சிகளை பேராசிரியர் ஜெயராமன் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பழைய மாணவர் அப்துல் ரசாக், மாணிக்கராஜ், டி.சந்தணகுமார், ஏ.சந்தணகுமார், மூக்காண்டி, ஜெயகீதன், சந்திரகுமார், ரவிச்சந்திரன், கலைச்செல்வன் ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story