மோட்டார் சைக்கிள் விபத்து: தே.மு.தி.க. ஒன்றிய பொருளாளர் பரிதாப சாவு; நண்பர் காயம்
பெரியபாளையம் அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய தே.மு.தி.க. பொருளாளர் பலியானார். அவரது நண்பர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய தே.மு.தி.க. பொருளாளர் பதவி வகித்து வந்தவர் கோபி (வயது36). விவசாயி. இவர் அதேபகுதியை சேர்ந்த தனது நண்பரான ரவி என்பவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆவடிக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு வந்தனர். பெரியபாளையம் அருகே உள்ள பேட்டைமேடு கிராமம் அருகே சாலை வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கண்இமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் இருந்த கால்வாய் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கோபி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
விபத்தில் பலியான தே.மு.தி.க. நிர்வாகி கோபிக்கு சங்கீதா என்ற மனைவியும், சாரதி, சபரி என்ற மகன்களும் உள்ளனர்.

Related Tags :
Next Story