தி.மு.க.வினர் பட்டை நாமம் போட்டு போராட்டம்


தி.மு.க.வினர் பட்டை நாமம் போட்டு போராட்டம்
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

நெடுங்குணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு தி.மு.க.வினர் பட்டை நாமம் போட்டு போராட்டம் நடத்தினர்.

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர்கள் பதவிக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற வேண்டும். ஆனால் நேற்று தேர்தல் அலுவலர் ரமேஷ்பாபு வரவில்லை.

இதனை கண்டித்து தி.மு.க. சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில், 75 பேர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு பட்டை நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story