பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தட்டுப் பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கணேஷ் தெரிவித்தார்.
அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார். அரிமளம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுநிலையில் 14-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக்கிணறு, கடையக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஆழ்துளை கிணறுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கைக்குளான்வயல் ஊராட்சி கரையப்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆழ்துளை கிணறுடன் கூடிய தண்ணீர்த்தொட்டி, இரும்பாநாடு கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, திருவாக்குடி ஊராட்சி வெள்ளாளவயலில் மாவட்ட ஊராட்சி நிதியின்கீழ் ரூ.14 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளைகிணறு அமைக்கும் பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
குடிநீர் தட்டுப்பாடு
ஆய்வின்போது கலெக்டர் கணேஷ் கூறுகையில், கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அதிகாரி நடராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story