மாநில செய்திகள்

முகநூல் காதல்: சட்டக்கல்லூரி மாணவியுடன் வீட்டில் தனியாக இருந்த காதலன் திடீர் சாவு + "||" + Love With law student The house was alone Lover sudden death

முகநூல் காதல்: சட்டக்கல்லூரி மாணவியுடன் வீட்டில் தனியாக இருந்த காதலன் திடீர் சாவு

முகநூல் காதல்: சட்டக்கல்லூரி மாணவியுடன் வீட்டில் தனியாக இருந்த காதலன் திடீர் சாவு
முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த சட்டக்கல்லூரி மாணவியுடன் தனியாக வீட்டில் இருந்த வாலிபர் திடீரென இறந்தார். தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் செய்தார்.
திருவொற்றியூர்,

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் செட்டிப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் தென்னவன் (வயது 23). என்ஜினீயரிங் படித்து உள்ள இவர், பூந்தமல்லியில் தனது நண்பர்களுடன் தங்கி, சென்னை அண்ணாநகரில் உள்ள ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.


இவருக்கும், சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் 22 வயதுடைய மாணவிக்கும், முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி, தனது குடும்பத்துடன் திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவியின் பெற்றோர், தங்களது சொந்த ஊரான கேரள மாநிலத்துக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டனர். மாணவியை பக்கத்து தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விட்டு சென்றனர்.

இதுபற்றி அவர், காதலன் தென்னவனுக்கு தகவல் தெரிவித்து, தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு மாணவியின் வீட்டுக்கு தென்னவன் சென்றார். பின்னர் இருவரும் ஒரே அறையில் தனியாக இருந்தனர். அப்போது தென்னவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய தென்னவனை மீட்டு அருகில் உளள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், வரும் வழியிலேயே தென்னவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று தென்னவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி மாணவியிடம் போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். முதலில் தென்னவனை எலக்ட்ரீசியன் என்று கூறிய மாணவி, பின்னர் அவர் தனது காதலன் என்றும், தாங்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது, தனது பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காதலனை தனது வீட்டுக்கு வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும், அப்போது திடீரென காதலனுக்கு வலிப்பு ஏற்பட்டு விழுந்து விட்டதாகவும், அதை மறைக்கவே தென்னவனை எலக்ட்ரீசியன் என கூறி தனது உறவினர்களிடமும், போலீசாரிடமும் நாடகம் ஆடியதாக மாணவி ஒப்புக்கொண்டார்.

மேலும் கடந்த நவம்பர் மாதம் தனது பிறந்தநாள் அன்று தென்னவன் தனது வீட்டுக்கு பரிசு கொடுக்க வந்தபோது, அவரை எனது நண்பர் என பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும் மாணவி தெரிவித்தார்.

இதுபற்றி தென்னவனின் தந்தை ரவிச்சந்திரன், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தென்னவன் எப்படி இறந்தார்? இயற்கை மரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.