தந்தை கண் எதிரே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலி


தந்தை கண் எதிரே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலி
x
தினத்தந்தி 5 May 2018 3:45 AM IST (Updated: 5 May 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் தந்தை கண் எதிரே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நாகநாதபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் சதக்கத்துல்லா(வயது 54). இவருடைய மகள் ஜெய்னுல் அரபி(22). தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரை நேற்று காலை பள்ளியில் விடுவதற்காக தந்தை சதக்கத்துல்லா மொபட்டில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 13-வது தெருவில் சென்று கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த லாரி மொபட்டின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெய்னுல்அரபி மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் தந்தையின் கண் எதிரே சம்பவ இடத்திலேயே ஜெய்னுல்அரபி பரிதாபமாக துடிதுடித்து பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக சதக்கத்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த முத்துச்சாமி மகன் தர்மராஜன்(52) என்பவரை கைது செய்தனர்.

Next Story