உசிலம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கைது


உசிலம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
x
தினத்தந்தி 5 May 2018 3:45 AM IST (Updated: 5 May 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து உசிலம்பட்டி பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 23 பேரை உசிலம்பட்டி போலீசார் கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Next Story