மணல் கடத்திய 2 பேர் கைது


மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2018 3:35 AM IST (Updated: 5 May 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்,

விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேலூர் அருகே உள்ள செதுவாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதனையடுத்து போலீசார் மணலுடன் மினிவேனை பறிமுதல் செய்து, மணல் கடத்திய விரிஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), கோபாலகிருஷ்ணன் (19) ஆகியோரை கைது செய்தனர்.

Next Story